திருச்செந்தூர் அமலிநகர் மீனவர் கிராமத்தில் அமலி அன்னை ஆலயத்தின் 83வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி இன்று காலை இன்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது, மணப்பாடு யாகப்பர் ஆலய பங்கு தந்தை லெரின் டிரோஸ் அன்னையின் திருவிழா கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார். பின்னர் மண்ணின் மைந்தர் அருட்தந்தை பிரதீப் அன்னைக்கு மணிமகுடம் சூட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆலந்தலை பங்கு தந்தை சில்வர்ஸ்டர், மண்ணின் மைந்தர் அருட்தந்தையர்கள் ஜெயகர், பிரதீப், அமலிநகர் ஆலய பங்கு தந்தை வில்லிம்ஸ் சந்தானம் மற்றும் அமலிநகர் பங்கு ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவையொட்டி தினசரி நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் திருவிழா செப்டம்பர் 7 மாலை 5 மணி திருவிழா ஆராதனை நடைபெறும். இதனை தொடர்ந்து அன்னையின் ஆடம்பர சப்பர பவனி நடைபெறுகிறது, மறுநாள் திருவிழா 8 ந்தேதி பெருவிழா தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி சிறப்பாக நடைபெறுகிறது.


