வல்லநாட்டில் சாலையில் சென்றவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாட்டில் ஒரு தோட்டத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர் முறப்பநாடு கலியாவூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துகல்யாணி (25) என்பதும், அவர் அப்பகுதியில் சாலையில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் முத்துகல்யாணியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


