“அய்யோ பிச்சுமணி எங்க போனாலோ தெரியலையே. ஏப் பிள்ளை பிச்சு மணி எங்களா போன”. அந்த கூட்டத்தின் தலைவன் ஓங்கி குரல் கொடுத்தார். அந்த குரல் கேட்டும் பதில் சொல்ல முடியாமல் பிச்சுமணி குழிக்குள் இருந்தாள்.
“பிச்சு மணி. பிச்சு மணி குரல் நடு ஆற்றுக்குள் ஒலித்து, திரும்ப எதிரொலியாக அந்த காடு முழுவதும் கேட்டது.
அந்த சமயத்தில் ரங்கனும் மந்திர வாதியும் ஊருக்குள் இருந்து வருவது போல எதிரே வந்தார்கள். “என்ன அந்த பிள்ளைய தேடுதியளா. அவ குளத்து கரையில ஏறி தள்ளாடி தடுமாறி ஊருக்குள்ள போறா”. என்றான்.
“எப்படி எங்கள விட்டுட்டு போவா”. சந்தேகமாக கேட்டார் பெரியவர்.
“யாரு கண்டா. நான் பாத்தேன். அங்கதான் போயிட்டு இருக்கா” என்றான் ரங்கன்.
மந்திரவாதியும் “ஆமாம். ஆமாம்” என தலையாட்டினான்.
“அய்யோ பிள்ளைதாச்சி பொண்ணு. அவ புருசனுக்குதெரியாம கூட்டிட்டு வந்தோம். வாங்க போயி பாப்போம். சாமியோ நல்ல சாப்பாடு போட்டியே வாரோம் சாமி ” என பரபரப்புடன் ராட்டிய தலைவன் முன்னால் செல்ல அனைத்து கூட்டமும் ஒட்டு மொத்தமாக அங்கிருந்து கிளம்பினர்.
அவர்கள் அவசரஅவசராக ரோட்டை நோக்கி ஓடினர்.
கோயில் வளாகமே நிசப்தமானது.
முத்து சாம்பவனை பார்த்து ரங்கன் சாம்பவன் கள்ளச் சிரிப்பு சிரித்தான். அவர்களை பார்த்தப்படியே மந்திரவாதி கோயிலுக்குள் நுழைந்தான்.
கோயில் பூடத்தின் முன்பு அமர்ந்தவன், தொடர்ந்து ஓமகுண்டலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். தொடர்ந்த அவன் வளர்த்த நெருப்பு சுவலை பயங்காட்டியபடியே காற்றில் ஆடியது. அந்த வெளிச்சத்தில் மந்திரவாதி ரத்த காட்டேரியாக தெரிந்தான்.
“ஓம் கரீம் கரீம். ஓம் கரீம் கரீம்”
அவனின் சத்தம் விண்ணைப் பிளந்தது.
ஏதோ நடக்க போகிறது என்று அறிந்த தவளை கூட்டம் கூட கறகற வென சத்தம் போட்டு, பின் பயந்தபடியே அடங்கி விட்டது. ஆனால் ஆந்தை கூட்டம் மட்டும் கத்துவதை நிறத்தவே இல்லை.
ஒரு கட்டத்தில் பூஜையின் உச்சகட்டத்துக்கு போன மந்திரவாதி, “கொண்டு வாங்கடா அவளை” என கத்தினார்.
மறுநிமிடம் முத்துவும், ரங்கனும் குழிக்குள் இறங்கி பிச்சுமணியை தூக்கி வெளியே கொண்டு வந்தனர்.
திமிறியபடி இருந்த பிச்சுமணி அழுது அழுது கண்கள் வீங்கி முகம் சிவந்திருந்தாள். அவளின் செவந்த விழிகள் மேலும் சிவந்து போய் இருந்தது. வேர்த்து விறுவிறுத்து போய் இருந்தவள், உடம்பில் இருந்த வேர்வை மழை போலவே கொட்டியது. வயிற்றில் குழந்தையின் உதறல், அதோடு மட்டுமல்லாமல் அவளை கட்டி போட்டு இருந்த காரணத்தினால் உடல் ரணம் ஏற்பட்டு துடித்தாள். ஆனால் அவளால் கத்த முடியில்லை. வாயையும் கையையும் கட்டி அல்லவா வைத்து இருந்தார்கள்.
“கையை அவிழந்து விடுங்கா. வாய் கட்ட அவுருங்கடா”. என்றான் மந்திரவாதி.
அதன் படியே அவிழ்த்து விட்டார்கள்.
அலறினாள் பிச்சுமணி. அவள் அலறல் சத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்த ராட்டிய தலைவனுக்கு கேட்டது.
“ஏலே எங்கோ பிச்சுமணி குரல் கேக்குளா”. என்று உடன் சென்றவர்களிடம் கேட்டான்.
“போ. செவிட்டு மனுசா. எங்க கேக்கு. அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேயி. அவ இதுக்குள்ள ஊருக்கு போயிருப்பா. அவ புருசன் வந்து கூட்டிட்டு போயிருப்பான்”. கூட வந்தவன் தீர்க்கமாக கூறினான்.
அனைவருக்கு சரி என்றே பட்டது. எனவே அவர்கள் தங்கிருந்த இடத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாய் சென்றனர்.
தனி மனுசியாக அவர்களிடம் தப்பிக்க பிச்சுமணி முயற்சித்தாள்.
“என்னை எங்க கொண்டு போறீய. என்னை விட்டுறுங்க” பிச்சுமணி கதறுனா.
பாவம் அவ பேச்சை யாரு கேட்க போறாங்க. அண்டா நெறைய பணம் இருக்கு, நகை இருக்கு. அது வெளிய வரணும்னா இவளை பலிகொடுத்தே தீரணும். அந்த நரபலியை பார்த்து காத்து இருக்கிற பூதம் விளகும். நாம அந்த பொன்னையும் பொருளையும் அள்ளனும்னா, சும்மா விட முடியுமா என்ன? முத்துவும் ரங்கனும் அவளை இழுத்துக் கொண்டு போய் மந்திரவாதி முன்பே உட்காரவைத்தனர்.
மந்திரவாதியை பார்த்தவுடனே அவளுக்கு புரிஞ்சு போச்சு. நம்மள கொல்லப்போறானுவ. நிறைமாத கர்ப்பிணியை பலி கொடுப்பவங்கன்னு கேள்வி பட்டு இருக்கிறாள். அதற்குதான் தம்மை கொண்டு வந்திருக்கிறார்கள் என புரிந்து கொண்டாள்.
அவ கையெடுத்து கும்பிட்டா.
“என்னை விட்டுருங்க. ராட்டியன் என்னை தேடுவான். என்னை காணலைன்னா உங்களை சும்மா விடமாட்டான்னு” கண்ணீர் மல்க அழுதபடியே பேசினாள்.
“ஆமா.. பொல்லாத ராட்டியன். என்ன கிழிச்சிருவானா?” முத்து கர்ஜித்தான்.
இனி இவனு இடம் கெஞ்சி பார்த்து புண்ணியம் இல்லை. எனவே அதட்டி பேசிப்பார்ப்போம் என கோபமாக கத்த ஆரம்பித்தாள். “இங்க பாரு.என்னை நீ பலிகொடுத்தா, உன் குடும்பத்தை வேரறுக்காம விட மாட்டேன். ஆமா. இது எம் வயித்தில இருக்க குழந்தை மேலே ஆணை” ராட்டிச்சி கண் சிவக்க சாபமிட்டாள்.
“ஆமா, எனக்கு பொன்னும் பொருளும் கிடைச்சா போதும். எத்தனை பிரச்சனை வந்தாலும் சமாளிப்பேன். நீபேசாம இரு” ரங்கன் அவளை நோக்கி சத்தம் போட்டான்.
மந்திவாதி “ம். நடக்கட்டும்” என கர்ஜித்தான்.
ராட்டியச்சியை கிடத்தி உடம்பு புறாவும் மஞ்சள், குங்குமம் பூசினார்கள். பூவால அபிஷேகம் பண்ணினார்கள். அவ துடிச்சா. கதறுனா. ஆனா. இரண்டு பேரும் கண்டுக்கொள்ளவே இல்லை.
மந்திரவாதி எழுத்தான்.
அரிவாளை தூக்கி ஒரே வெட்டு. “ஆவ்’’ன்னு ராட்டிச்சி கதறுன சத்தம் வானத்தை கிழித்துக்கொண்டது.
அந்த மரண ஓலம் , அந்த மூன்று பேருக்கும் சந்தோசத்தினை கொடுத்தது. ஆனால் பிச்சுமணி உடல் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டு விட்டு துடிதுடித்துசெத்துக்கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நிமிசத்தில நமக்கு புதையல் கிடைச்சிரும். மூன்று பேரும் சந்தோசமாக இருந்தனர்.
அவ ரத்தம் தெறிச்ச இடத்தில் ஓடிப்போய் தோண்டிப்பார்த்தனர் முத்துவும் , ரங்கனும். ஆனால், புதையலை காணவில்லை . என்ன செய்ய… திணறி போகிவிட்டான் மளையாள மந்திரவாதி.
திரும்பவும் சோளி போட்டு பாத்தான். அடுத்த நிமிடமே செத்து போன கர்ப்பிணி பிச்சு மணி ராட்டிசி தான் துலங்கினா. அதோடு மட்டுமல்லாமல் அருகில் இருந்த ஆந்தை மூலமாக பேசினாள்.
“நாங்க காடு மேடா அலைஞ்சாலும் என் புருஷன் உழைப்பில நிம்மதியா வாழ்ந்து கிட்டேயிருந்தேன். தல கொழந்தை ஆம்பிள பிள்ளையா பொறக்கும்ன்னு சந்தோ ஷமா இருந்தோம். என்னை கொன்னு என் குடும்பத்தை பிரிச்சிட்டீங்க. என்னை அநியாயமா கொன்னை உங்க மூன்று பேரையும் நான் சும்மாவிட மாட்டேன். வேறருக்காம விட மாட்டேன்”. கத்தினா. ராட்டியச்சி.
அவ சொல்லச் சொல்ல மந்திரவாதி “ஏய் உன்னை சும்மா விட மாட்டேன்” என விபூதியை தூக்கி அந்த ஆந்தை மேல் எறிந்தார்.
ஆந்தை பயங்கரமாய் கத்தியபடியே பறந்தது. அவனால் அதை ஒன்றுமே செய்ய முடியவில்லை.
மறுநிமிடம். அங்கு ஒரு ஆச்சரியம் நடந்தது.
விபூதி எறிந்த கை அப்படியே மடக்க முடியாமல் நின்றது. தொடர்ந்து வாயில் இருந்து ரத்தம் வந்தது. பூமியில் சரிந்தவன் துடி துடித்து கீழே விழுந்தான். அருகில் கிடந்த பிரம்பை எடுக்க முயற்சி செய்தான். ஆனால் முடியவில்லை. என்ன செய்ய என்று அருகில் இருக்கும் இருவரும் தவித்து நிற்க அவன் உயிர் பிரிந்தது.
முத்துவும், ரங்கனும் அதிர்ந்தனர். அவன் தான் கதாநாயகன். அவனே செத்து போயிட்டான். நாம இரண்டு பேரும் எம்மாத்திரம். இரண்டு பேரும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.
ஆனால் உருட்டை விழியுடன் ஆந்தை அவர்களை பின் தொடர்ந்தது.
அங்கிருந்த ஒரு பந்தத்தை பிடிங்கிய அதன் வெளிச்சத்தில இருவரும் ரோட்டை நோக்கி நடந்து வந்தனர்.
ஹோ என்ற இறைச்சலும் காற்று சுற்றி அடித்தது.


