தூத்துக்குடியில் புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தூத்துக்குடி நகரில் துணை காவல் கண்காணிப்பாளர் மதன் ஆலோசனையின் படி போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகரில் இரு சக்கர வாகனத்தில் அதிக சத்தம் தரக்கூடிய சைரன் வாகனங்கள், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டினால், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர்களுக்கு மேல் வாகனத்தில் சென்றால், நடு இரவில் பைக் ரேஸில் ஈடுபட்டாலும் இரு சக்கர வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். மேலும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் காசிராஜன், சண்முக பாலன், வெங்கடேசன் மற்றும் போலீசார் மேல பெரிய காட்டன் ரோட்டில் விதிகளை மீறிய இருசக்கர வாகனங்கள் 20க்கும் மேற்பட்ட வாகனங்களை போக்குவரத்து காவல்துறையினர் நிறுத்தி விதிகளை மீறிய இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆகையால் சிறுவர்கள் மாநகர பகுதியில் விதிகளை மீறினால் உடனடியாக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் விதிகளை மீற வேண்டாம் இரவு நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபடக்கூடாது என்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் கூறியுள்ளார்.


