ஸ்ரீவைகுண்டம் தாலூகா மணிமுத்தாறு பாசனம் மூன்றாவது ரீச்சில் உள்ள குளம் தெற்கு காரசேரி குளம். இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய குளங்களில் இதுவும் ஒன்று. இந்த குளம் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து 5 வது நாளாக இந்த குளத்தில் இருந்து மருகால் பாய்க்கிறது. இந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. பல வருடங்களாக இந்த குளம் நிறைந்து பார்க்க மக்களும், இளம் வயதினரும் ஆச்சரியத்துடன் தெற்கு காரசேரி மருகாலை பார்த்து செல்கிறார்கள்.


