தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணைக்கட்டு பகுதியில் தற்போது நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் இன்று (30.11.2021) மாலைக்குள் அதிகளவு நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், யாரும் ஆற்றுப் பகுதிக்குச் சென்று வேடிக்கை பார்ப்பதற்கும் நீந்துவதற்கும் செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது குற்றாலத்தில் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. எனவே சிற்றாற்றிலும் வெள்ளம் அதிகரித்துள்ளது. சிற்றாரு வெள்ளம் சிவலப்பேரியில் தாமிபரணி ஆற்றில் வந்து சேருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கருதப்படுகிறது. தூத்துககுடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் இரண்டு பக்கமும் கரையை தொட்டு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.


