தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணைக்கட்டு பகுதியில் தற்போது நீர்வரத்து அதிகளவு வந்து கொண்டிருக்கிறது. எனவே கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், யாரும் ஆற்றுப் பகுதிக்குச் சென்று வேடிக்கை பார்ப்பதற்கும் நீந்துவதற்கும் செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அறிவிப்பின் மீது நடவடிக்கை எடுத்தார் கருங்குளம் ஒன்றியம் ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர். இவர் ஆறாம்பண்ணையில் உள்ள அனைத்து தெருக்கள், மற்றும் அரபாத் நகர் ஆகிய இடங்களில் சென்று ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்கு வெள்ள எச்சரிப்பை விடுத்தார். மக்கள் கரையோரத்துக்கு செல்ல கூடாது என அவர் எச்சரித்தார். மேலும் வெள்ளத்தினை கண்காணிக்க ஆறாம்பண்ணை பஞ்சாயத்து இளைஞர்களை திரட்டி கண்காணித்து வருகிறார்.


