தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல அலுவலகங்களின் நிர்வாக மேலாளராக திருநெல்வேலி திருமண்டலம் பேரின்பபுரம் தேவா காபிரியேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சி.எஸ்.ஐ. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அலுவலகம், பேராயர் அலுவலகம், குளோபல் மிஷனரி சங்க அலுவலகம் ஆகியவற்றின் அலுவலக நிர்வாக மேலாளராக டாக்டர் தேவா காபிரியேல் ஜெபராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகியும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் பேரின்பபுரத்தை சேர்ந்த தேவா காபிரியேல் ஜெபராஜன் சி.எஸ்.ஐ. சினாடு பேரவையின் உறுப்பினராகவும், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல இடைக்கால நிர்வாகக் குழுவிலும் இருந்து வந்துள்ளார். தற்போது திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகவும், சமூகப் பணியாளராகவும் உள்ளார்.


