தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக அன்புராஜ் ஜெபசிங், செயலாளராக ப.ஹீராஜான், பொருளாளராக ரா. பாலமுருகன் ஆகியோர் வெற்றி பெற்றனர். பொதுக்குழுவில் துணை நிர்வாகிகளை நியமனம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு தீர்மானத்தின்படி துணை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கௌரவத் தலைவராக சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஆர்.ராமலிங்கம், துணை தலைவர்களாக பி.சிவக்குமார், எஸ்.சண்முகவேல், பி.ராமர், சட்ட ஆலோசகராக சொ.ராஜா, துணை செயலாளர்களாக ஆர்.மோகன்தாஸ், வி.நாராயணன், எம்.மணிகண்டன், துணை பொருளாளர்களாக ஜெ.ஜோசப், எஸ்.பாலகணேசன், ஏ.செல்லதுரை, ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா முகாம்-2 சமுதாயக்கூடத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் தலைவர் சேவியர், செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் மணிகண்டன், துணைத் தலைவர்கள் செல்லத்துரை, நாராயணன், துணை பொருளாளர் குரூஸ் ராஜா, துணைச் செயலாளர்கள் ராமையா, சேகர், பொதுச் செயலாளர் ராஜன், இணை பொதுச்செயலாளர் ரமேஷ், ஆலோசனை கமிட்டி தலைவர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தொழில் அதிபர்கள் ராமையா, ஜாம்பர்ட் மதுரம், திரவியம் ஜான், அசோகன், ராகவன், ஜெபர்சன், ராம குணசீலன், ஜோதிமணி, அப்பல்லோ டிரான்ஸ்பார்மர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறினர்.


