★ அடுத்த 24 மணி நேரத்தில், #தூத்துக்குடி #நெல்லை #ராமநாதபுரம் #குமரி மாவட்டங்களில் அதீத மழைக்கான #ரெட்_அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
★ தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றுழுத்த தாழ்வு பகுதி, மிகவும் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
★ இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.
★ கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் #திருவைகுண்டம் பகுதியில் 184 mm அளவில் மிக கனத்த மழை பெய்துள்ளது.
★ அடுத்த நான்கு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும்.
=========================
#தூத்துக்குடிக்குரெட்அலர்ட்!
★ தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தீவிரமான மழை பொழிவு பரவலாக இருந்தது. மாநகரின் பல பகுதிகளில் வலுவான மழை பெய்துள்ளது.
★ கடந்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் மிக கனமழையும், 8 இடங்களில் கனமழையும், பரவலாக மிதமான மழையும் பெய்துள்ளது.
★ அதிகபட்சமாக திருவைகுண்டம் பகுதியில் 184 mm மழையும், தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் 168 mm மழையும் பெய்துள்ளது.
★ காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மேற்கு நோக்கி நகரும் என்பதால், மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்.
★ இன்று மாலை இரவு/நள்ளிரவு முதல் தூத்துக்குடி போன்ற தெற்கு கடலோர பகுதிகளில் மீண்டும் கனமழை முதல் மிக கனமழை வாய்ப்பு உள்ளது.
★ அடுத்த 3 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும். ஓரிரு இடங்களில் அதீத மழைப்பொழிவு இருக்கலாம்.
★ ஏற்கெனவே , நேற்று பெய்த மழையால் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழை அதிகரிக்கும் என்பதால், மாநகர் போன்ற கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய உள் பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கலாம்.
★ வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலைகள் கவனமாக செல்லவும். மழை அதிகரிக்க கூடும் என்பதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும்.
★ கடற்பகுதியில் மேகங்கள் உருவாகி வருகிறது. அவை மேற்கு தென்மேற்கு திசை நோக்கி நகரும். தென் கடலோர மாவட்டங்களில் மழை விரைவில் துவங்கும்.
★கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, நெல்லை,குமரி,தென்காசி மாவட்டத்தில் பதிவான மழை அளவுகள்:-
#தூத்துக்குடி_மாவட்டம்:-
திருவைகுண்டம் – 184 mm
தூத்துக்குடி – 91.6 mm
தூத்துக்குடி AWS- 137 mm
தூத்துக்குடி புதிய துறைமுகம் – 168 mm
முறப்பநாடு – 131.6 mm
தேர்க்கண்குளம் – 109 mm
எட்டையபுரம் – 31.2 mm
கடம்பூர் – 76 mm
கயத்தாறு – 75 mm
பனையூர் – 55.5 mm
வேப்பலோடை – 78 mm
கழுகுமலை – 7 mm
கோவில்பட்டி – 35 mm
கீழ_அரசடி – 13 mm
மணியாச்சி – 75 mm
ஓட்டப்பிடாரம் – 127 mm
வேடநத்தம் – 20 mm
கடல்குடி – 12 mm
சூரங்குடி – 42 mm
வைப்பர் – 72 mm
விளாத்திக்குளம் – 32 mm
சாத்தான்குளம் – 48.4 mm
காயல்பட்டினம் – 85 mm
திருச்செந்தூர் – 47 mm
குலசேகரப்பட்டனம் – 19 mm
கோவில்பட்டி AWS – 34
திருச்செந்தூர் AWS – 34
கயத்தாறு ARG – 60
சாத்தான்குளம் ARG – 2.5
#திருநெல்வேலி_மாவட்டம்:-
அம்பாசமுத்திரம் – 30 mm
மணிமுத்தாறு – 33 mm
பாபநாசம் – 42 mm
சேரன்மகாதேவி – 29.8 mm
நாங்குநேரி – 51 mm
ராதாபுரம் – 21 mm
பாளையங்கோட்டை – 75 mm
திருநெல்வேலி – 57.8 mm
#தென்காசி_மாவட்டம்:-
சங்கரன்கோவில் – 61.5 mm
ஆய்குடி – 36 mm
செங்கோட்டை – 29 mm
சிவகிரி – 22 mm
தென்காசி – 27.2 mm
நன்றி….


