வாகை குளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம், பாளையங்கோட்டை செந்தமிழ் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய ஊழல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் வேளாண்மை கருத்தரங்கம் ஆழ்வார்திருநகரி ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் நடந்தது.
ஆழ்வார் வட்டார பொறுப்பாளர்கள் கருப்பன், ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நங்கமுத்து வரவேற்றனர்.
கூட்டத்தில் காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி நுட்பங்கள் குறித்து வேல்முருகன், ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து முருகன், பயிர் பாதுகாப்பு பற்றி முத்துக்குமார், பயன்தரும் வீட்டுத் தோட்டம் எனும் தலைப்பில் சுமதி, வேளாண்மையில் ஊடகப்பணிகள் குறித்து முனைவர் ஜி. மாசான செல்வன் மற்றும் டி.வி.எஸ் அறக்கட்டளையின் தொழில்நுட்ப வல்லுநர் ரமேஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
ஸ்காட் நிறுவனத்தின் சார்பாகக் கலந்து கொண்ட விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப கையேடு வீட்டுக்காய்கறித் தோட்டத்திற்குத் தேவையான காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. அனைவரும் ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இரண்டாவது அமர்வில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தாமிரபரணி நதிநீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் கருங்குளம் துணைத் தலைவர் பாலமுருகன், கடம்பன் குளம் விவசாயிகள் நலச் சங்கத்தலைவர் உத்திரம், சாத்தான்குளம் வட்டார பொறுப்பாளர் சித்ரா, மணக்கரை சங்கிலி முத்து, வல்ல நாடு விவசாய ஆர்வலர் குழு தலைவர்கள், தம்பான், தங்கப்பாண்டி ஆகியோர் பேசினர்.
முன்னோடி விவசாயிகள் மாரியப்பன், அற்புதராஜ், ராஜேந்திரன், செல்லப்பா, செல்வம், ஜான் மைக்கேல் ராஜ், பிள்ளை மடையூர் பெருமாள், பாலசுப்ரமணியன் கலந்து கொண்டனர்.
குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் மாரியம்மாள் நன்றி கூறினார்.


