செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜாய்ஸ் மேரி முன்னிலை வகித்தார்.
கல்லூரி நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஆறுமுகசேகர் முகாமை ஒருங்கிணைத்தார். தூத்துக்குடி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் உத்தரவின் படி, மாவட்ட பூச்சியில் வல்லுநர் கருப்பசாமி முகாமை துவக்கி வைத்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர் ராகேஷ் தலைமையில், கருங்குளம் அரசு மருத்துவமனை டாக்டர் முருகேஸ்வரி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன், சுகாதர ஆய்வாளர்கள் சண்முகபெருமாள், சீனிவாசன், ஜாகீர், தூத்துக்குடி அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஸ்பிரின்ஜின் புவனேஸ்வரி, மீனாட்சி, முத்துக்குமாரி, கிராம சுகாதார செவிலியர்கள் சுஜாதா, புனிதா, தூத்துக்குடி அரசு மருத்துவமனை தொழில்நுட்ப உதவியாளர் வெங்கடேஸ்வரன், கவுன்சிலர் ராஜராஜேஸ்வரி, மருத்துவமனை அலுவலர் சேஷம்மாள், உதவியாளர் சதீஷ் ராஜ், ஓட்டுனர் பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி மற்றும் கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


