மடையன் மடையர்கள் இரண்டும் வேறு வேறு பெயர்கள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டும் மடத்தனம் என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது.நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் பழந்தமிழர்கள்.ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை. கட்டி அதன் போக்கை திருப்பி கால்வாய் மூலம் ஏரி குளம் கண்மாய்களில் நீரை நிரப்பினர்.பெரிய ஏரிகளுக்கு மடு என்று பெயர்.மடுவில் உள்ள நீரை வயல்களுக்கு பாய்ச்சும் அமைப்பிற்கு மதகு என்று பெயர் .இது ஆபத்தில்லாதது. நீரை கூட்டவோ குறைக்கவோ இதில் வசதியுண்டு
வெள்ளக் காலங்களில் ஏரி முழுவதும் நிரம்பி உடையும் தருவாயில் இருக்கும் போது ஊரை பாதுகாக்க அவசர அவசரமாக நீரை வெளியேற்றும் அமைப்பிற்கு மடை என்று பெயர்.இதை கையாள்வது ஆபத்தானது
பழந்தமிழர்கள் ஏரியை பாதுகாப்பவர்களுக்கு நீர் கட்டியான் என்றும் நீர்மட்டத்தை கண்காணிப்பவர்களை நீர் காரணியர் என்றும் ஆபத்தான வெள்ளக் காலங்களில் ஏரியின் நடுவில் ஆழத்தில் உள்ள மடையை உயிரை துச்சமென எண்ணி மூச்சடக்கி ஏரிகயின் ஆழத்திற்கு மூழ்கி சென்று மடையை திறந்து ஏரி உடையாமல் திறப்பவர்களை மடையர்கள் என்று அழைத்தனர். அப்படிப்பட்ட வேலையை செய்ய மடையர்கள் நிரம்ப தேர்ச்சி பெற்றிருந்தனர். அப்படிப்பட்ட ஆபத்தான காலங்களில் அவர்களுக்கு மேளதாளத்துடன் மாழையணிவித்து வழியனுப்பி வைப்பர்.ஏனெனில் மடையை திறந்து பின் அவர்கள் திரும்பி வருவது உறுதியல்ல.அனேகர் அந்த முயற்சியில் உயிரிழந்திருக்கிறார்கள்.அப்படி மடைதிறக்கும் போது உயிரிழந்தவர்களுக்கு நடுக்கல் நட்டி தெய்வமாக வழிபட்டிருக்கிறார்கள். இன்றும் மிகப்பெரிய பழமையான ஏரிக்கரையில் மட கருப்பன் மட வீரன் என்ற பெயரில் சிறு சிறு கோயில்களை காணலாம்
.ஆனால் காலப்போக்கில் இப்போது மடயன் மடையன் இரண்டுக்கும் ஒரே பொருளிலே அந்த பெயர்கள் கையாளப்படுகிறது.நீங்கள் யாரையாவது திட்ட நேரும்போது மடயன் என்ற பதத்தை கையாளுங்கள். மடையன் என்ற பதத்தை கையாளாதீர்கள். ஏனெனில் மடையர்கள் என்பது வீர வழிபாட்டுக்குரிய வெள்ள ஆபாயகாலத்தில் ஊர் மக்களை காப்பாற்றிய வணக்கத்துக்குறியவர்கள்.


