திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக சாக்கடையை தாமிரபரணி ஆற்றில் கலப்பதாக நீதிமன்றம் வேதனை தெரிவித்த நிலையில் தாமிரபரணியை காக்க தவறிய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தாமிரபரணி குடத்தில் தண்ணீர் எடுத்து இதை எப்படி குடிக்க முடியும் என்று மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கு திமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் குடத்துடன் வந்து மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆணையரிடம் முறையிட்டார்