தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள ஸ்காட் குழுமத்தின் குட்ஷெப்பர்ட் மாடல் சிபிஎஸ்இ பள்ளியில் பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்காட் கல்விக் குழுமத்தின் இயக்குநர் ஜான் கென்னடி தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக அர்ஜுனா விருது பெற்ற கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் அவர் பேசும்போது மாணவர்கள் தங்களது பள்ளிப்படிப்புடன் சேர்த்து விளையாட்டு திறனையும் வளர்த்து தேசியளவில் உலகளவில் சாதிக்க வேண்டும் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர் குழுவாரியாக தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான சாகசங்களை செய்து காண்பித்தனர். முடிவில் பெரும்பாலான போட்டிகளில் முதலிடம் பெற்ற சிகப்புநிற மாணிக்க அணியினருக்கு வெற்றிக்கோப்பை அளிக்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ராபர்ட் பென் வழிகாட்டுதலின்படி ஆசிரிய ஆசிரியைகள் செய்திருந்தனர்.


