முகைதீன் ஜாமியா பள்ளிவாசல் மற்றும் அல்குதா கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி 28 6 2025 மற்றும் 29 6 2025 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது
இந்த கண்காட்சியை புதிதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள F S M அப்துல் காதர் அவர்கள் திறந்து வைத்தார்
ஸ்ரீவை சுற்று வட்டார ஜமாஅத் நிர்வாகிகள் அல்குதா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ஜமாத்தார்கள் பெண்கள் உட்பட 630 நபர்கள் இதனை பார்வையிட்டனர்
இதில் குறிப்பாக இந்தியாவில் இஸ்லாம் கடந்து வந்த வரலாறு மற்றும் நினைவு சின்னங்கள் கலை வடிவில் காட்சிப்படுத்தப்பட்டனர் மேலும் சொர்க்கம் நரகம் மாதிரி வடிவமைப்புகள் வாழ்வில் பேணவேண்டிய ஒழுக்கத்தை தத்ரூபமாக செய்துங்கநல்லூர் அல் மதரசதுல் புகாரியா மாணவ மாணவிகள் காட்சிப்படுத்திய விதம் மக்களை வியப்படைய செய்தது


