கடையத்தில் செல்லம்மா-பாரதி 128வது திருமண விழா ஜுன் 24ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இதில் 3வது நாளான ஜுன் 26 வியாழன் அன்று “தேமதுரத் தமிழோசை” என்னும் தலைப்பில் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாரதியின் கொள்ளுப் பேரன் திரு. இராஜ்குமார் பாரதி தலைமை வகித்தார்.
இதில் கவிமணி தேசிக விநாயம் பிள்ளையின் வழித்தோன்றல் குலசை. திரு. வேலுப்பிள்ளை, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர். நா. சங்கரராமன், எழுத்தாளர் திருமதி. இரா. சைலஜா சக்தி, கோவில்பட்டி, Dr. முத்துராமன், தென்காசி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும் இதில் எழுத்தாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் மற்றும் செல்லம்மாளின் மருமகன் திரு. சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு சேவாலயா பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இரா. சைலஜா சக்தி.


