தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பயணிகள் நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மா. பிரமநாயகம் வெளியிட்ட அறிக்கையில்,”வண்டி எண். 16791-16792 தூத்துக்குடி- பாலக்காடு -தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி (3rd A/C Coach) இணைத்ததற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை கோட்ட மேலாளர் ஆகியோருக்கு பயணிகள் நலச்சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தூத்துக்குடியில் இருந்து வரும் மற்றும் புறப்படும் ரயில்களுக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிறுத்தம் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


