தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை முகவர்களை நியமனம் செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.05.2024) பாராளுமன்ற பொது தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் வாக்கு எண்ணிக்கை முகவர்களை நியமனம் செய்வது குறித்தும்,மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


