தூத்துக்குடி மாவட்டம், ஏரல் கணபதி சமுத்திரம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜ்குமார். 36 வயதான இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடக்கவில்லையாம்.
இதனால் திருமணம் ஆகாத ஏக்கத்தில் விரகத்தியில் இருந்துள்ளார். இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


