தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 11 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் மற்றும் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தினை திறந்து வைக்க தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருகை தந்தார். இந்த நிகழ்ச்சிக்கு செக்காரக்குடி ஊராட்சி மன்றத்தலைவி ராமலெட்சுமி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைவர் செந்தில்ராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வந்து கொண்ட கனிமொழி 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நுலகத்தையும், 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு, அன்றோ, ஊராட்சி மன்ற தலைவர் ராமலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


