
வல்லநாடு திருமூலநாத சுவாமி கோவிலில் மகா சனி பிரதோஷ விழா நடந்தது.வல்லநாட்டில் மிகவும் பழமை வாய்ந்த திருமூலநாத சுவாமி கோவில் உள்ளது.பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட புராதனமான இந்தக் கோவிலில் மகாசனி பிரதோஷத்தை முன்னிட்டு ஜெய்க ஜானந்த் மகான் டிரஸ்ட் மதுரை சாய் கார்த்தி குழுவினர் சார்பில் சுவாமி, அம்பாள், நடராஜர், நந்தியெம்பெருமான் மற்றும் அனைத்துப் பிரகார தெய்வங்களுக்கும் புதிய வஸ்திரங்கள் அணிவித்துத் தாமரை , மனோரஞ்சிதம் மலர் மாலைகள் சூட்டப்பட்டன. முன்னதாக 1008 இளநீர் மற்றும் அபிஷேகப் பொருள்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2001 அகல் விளக்குத் தீபங்கள் கோவில் மற்றும் சுற்றுப் பிரகாரங்களில் ஏற்றப்பட்டன. பிரதோஷ உற்சவர் சப்பரம்சிறப்பு அலங்காரத்துடன் பக்தர் களின் ஜெய ஜெயசங்கர ஹர ஹர சங்கரகோஷ. முழக்கத்துடன் பிரகார வலம் வந்தது. விழாவில் இந்து அறநிலையத் துறை ஆய்வர் நம்பி , சென்னை வெங்கட்ராமன் மற்றும் வல்ல சுற்றுவட்டாரப் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அர்சகர்கள் சண்முகசுந்தர பட்டர் , சந்தோஷ் பட்டர் குழுவினர் சிறப்பு ஆரத்தி பூஜைகள் நடத்தினர் . விழா ஏற்பாடுகளைத் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.