ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய அதிகாரி கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். கொலைதொடர்பாக கைதானவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமுலம் அளித்துள்ளனர்.பாளை. கேடிசி நகரை சேர்ந்தவர் செந்தாமரைக் கண்ணன் (56) ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய கண்காணிப்பாளராக இருந்த இவர். கடந்த 16ம் தேதி பணி முடிந்து பைக்கில் கேடிசி நாகருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். புளி யங்குளம் பகுதி அருகே வரும்போது பின்னால் வந்த கார் மோதி விட்டு திற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைத்த செந்தாமரைக்கண்ணன் சிகிச்சை பலனின்றி இறத்தார்.செய்துங்கநல்லூர் போலீசார் விபத்து வழக்காக பதிந்து விசாரணை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய காரை கண்டுபிடிக்க அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது தான். திட்டமிட்டு பைக் மீது காரை மோதி கொன்றது தெரியவந்தது. காரின் பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தி வல்லநாட்டை சேர்ந்த மந்திரம் மகள் மகேஷ், சொரிமுத்து மகன் சுடலைமணி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மகேஷ், சுடலைமணி ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது, செந் தாமரைக்கண்ணனுக்கும். நாசரேத் அருகே கொமந்தா நகர் சாம்ராட் பாண்டியனுக்கும் இடப் பிரச்னையில் முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் சாம்ராட், எங்களையும் மற்றும் ஜெகள், கந்தகுமார், மார்த்தாண்டம் ஆகியோரை கோவாவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார். கடந்த ஜன.4ம் தேதி ரயில் விபத்தில் சாம்ராட் பலியானார். இதற்கு அவரது உறவினர்கள்,தண்பர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதற்கு கமாண்ட் போட்டிருந்த செந்தாமரைக் கண்ணன், “இறைவனின் தண்டனை” என்று விமர்சித்திருந்தார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நோட்டமிட்டு அவரது பைக் மீது காரை மோதச் செய்து தீர்த்துக் கட்டினோம். இது விபத்தாக தான் கருதப்படும். தப்பித்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர். இவ்வாறு கூறியுள்ளனர். மேலும் கொலைக்கு 5உடத்தையாகசெயல்பட்ட நெல்லை மூளிகுளம் செல்லையா மகன் ஜெகன்(2) வல்லநாடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குற்றாலம் மகள் சுந்தகுமார் (33), மார்த் தாண்டம் ஆகியோரை செய்துங்கதல்லூர் இன்ஸ் பெக்டர் அருன் தலைமையிலான தனிப்படையினர் தேடி வந்தனர். இதில் ஜெகன், கந்த குமார் ஆகியோரை நேற்று தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டத்தை தேடி வருகின்றனர்
நடந்தது என்ன?
செதாமரைக்கண்ணன் கொலை வழக்கில் தொடர்புடைய மகேஷ், கடலைமணி, ஜெகன், சுந்தகுமார். மார்த்தாண்டம் ஆகியோர் ரயில் விபத்தில் இறந்த சாம்ராட்டுக்கு நெருங்கிய உறவினர்களோ. நண்பர்களோ அல்ல என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவர்களை கூலிப்படையாக சாம்ராட்டே ஏற்பாடு செய்திருக்கலாம். இதற்காக கோவாவுக்கு அவர்களை அழைத்துச் சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அங்கு சாம்ராட் விபத்தில் பலியானதால் சதி திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்றியிருக்கலாம். இதில் வேறு யாரும் உடந்தையா என்ற கோணத்திலும் தனிப்படை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது