தூத்துக்குடியில் பைக், தள்ளுவண்டியை சேதப்படுத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அண்ணாநகர் 12ஆவது தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்த பைக், தள்ளுவண்டியை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். தகவலின்பேரில், தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சென்று, அப்பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மதன் (30) உள்ளிட்ட சிலருக்குத் தொடர்பிருப்பது எனத் தெரியவந்தது. மதன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


