நீர்நிலை பறவைகள்
தமிழகம் முழுவதும் வனத் துறைசார்பில் ஒருங்கிணைந்த தீர்பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்றும், நேற்று முன் தினமும் 2 நாட்கள் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தி லும் ஸ்ரீவைகுண்டம் வனச்சர கத்துக்கு உட்பட்ட வல்லநாடு, கருங்குளம், ஏரல், ஆறுமுகமங்களம் பகுதி நீர்நிலை களில் நீர்ப்பறவைகள் கணக் கெடுப்பு வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் 2 நாட்கள் நடந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கருங்குளம், பேரூர், பெருங்குளம், வெள்ளூர்,பேய்குளம், ஆறுமுகமங்களம், ஸ்ரீவைகுண்டம் கஸ்பா பகுதியில் உள்ள குளங்களில் வனத்துறையினர் 7 குழுக்களாக பிரிந்து தன்னார்வலர்களுடன் இணைந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
100-க்கும் மேற்பட்ட இனங்கள்
இந்த நீர்நிலை பகுதிகளில் விரால் அடிப்பான், நாமத் தலை வாத்து, நெய்காக்கை என அழைக்கப்படும் பாம்புத் தாரா, குள்ளத்தாரா, புள்ளி அலகு கூழைக்கடா, இந்திய வெள்ளைளை அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, வெண்க பட்ட நீர்பறவை இனங்கள் முத்து நாரை, காஸ்பியன் ஆலா உள்பட 100-க்கும் மேற் கண்டறியப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குளங்களிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்டநீர்பறவைகள் இருப்பது தெரிய வந்தது.
அவற்றில் சிறிய சீழ்க்கை சிறுகி, நீலச்சிறகி, நாமக் கோழி, குள்ளத்தாரா வாத்து வகை உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. கடந்த பருவமழையில் குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் நீர்ப்பற வைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, என்றார்.


