தூத்துக்குடியில் வாலிபரின் செல்போனை உடைத்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி எம். சவேரியார்புரம் அருகியுள்ள மகாநகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் அந்தோணி ரெஜின். இவர், நேசமணி நகர் பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, எம். சவேரியார் புரத்தைச் சேர்ந்த ஜெபமாலை மகன் ராஜன் (44), அதே பகுதியைச் சேர்ந்த இன்னாசி முத்து மகன் அருள்ராஜ் (30) ஆகியோர் அவரை வழிமறித்தனர்.
அவரது செல்போனை வாங்கி பேசினர். திடீரென்று அந்த செல்போனை கீழே போட்டு உடைத்து விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அருள்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.


