செய்துங்கநல்லூரில் இயங்கிவரும் கருங்குளம் ஒன்றியஅலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிககான அடிககல் நாட்டு விழா நாளை காலை 9மணிககு நடைபெறுகிறது. தூத்துககுடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு மீன் வளம்மீனவர்கள் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.எ ஊர்வசி அமிர்த்த ராஜ், மாவட்ட ஆட்சி தலைவர் மரு. செந்தில் ராஜ், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இதுகுறித்து கருங்குளம் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான தலைவர் தளபதி யார் அவர்களின் பொற்கால ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு மீன்வளம் மீனவர்கள் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் அவர்களும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி நாளை
29.10.2022 காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கருங்குளம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளின் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


