திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25.10.2022 அன்று தொடங்கி 30.10.2022 அன்று கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தென்மண்டல காவல்துறை அஸ்ரா கார்க் நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு நேரில் சென்று அங்கு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


