ஆழிகுடி கிராமத்தில் பண்ணைப்பள்ளி வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் 2021-&22 உழவர் வயல்வெளி பள்ளி வகுப்பு ஆழிகுடி கிராமத்தில் இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், எஸ்.ஐ.முகைதீன், மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனி வேலாயுதம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் நெல் பயிரில் நோய் மேலாண்மை சம்பந்தமாக வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் முனைவர் எபனேசர் விரிவாக விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் குறித்து வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் முனைவர் ரவி விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். வாகைக்குளம் வேளாண் அறிவியில் மைய உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முருகன் நெற்பயிரில் முதிர்ச்சி பருவத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த ஆய்வின் போது கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன், வேளாண்மை அலுவலர் காயத்ரி உடனிருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை உதவி வேலாண்மை அலுவலர் நூர்தீன் செய்திருந்தார்.
இப்பண்ணைப்பள்ளி பயிற்சியில் ஆழிகுடி கிராம விவசாயிகள் 30 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றார்.


