கருங்குளத்தில் வயது வந்தோர் கல்வி இயக்கம் சமுதாய அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு அரசுப் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் -கற்போம்- எழுதுவோர் சமுதாய அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தலின்படி நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் சுதாகர் சத்திய சிகா தலைமை வகித்தார். பள்ளி மாணவர்கள் சுமார் 138 பேர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குழுவினரால் ஆடல் பாடல் நிகழ்ச்சி மூலம் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அனைத்து மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். கற்போம் எழுதுவோம் என்ற மந்திரச் சொல்லை ஒருவரிடமும் கொண்டு செல்லும் வண்ணம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக உணர்த்தும் வண்ணம் நிகழ்ச்சியைக் கொண்டு சென்றனர். கலை நிகழ்ச்சியின் மூலம் மாணவியருக்கான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்ச்சியைக் கொடுத்தனர். தலைமையாசிரியர் நிகழ்ச்சியைச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.


