தூத்துக்குடியில் இன்று மாலை நடைபெறும் நம்ம தெரு நிகழ்ச்சியில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடக் கூடாது என்று எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள 5வது புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைவிழாவை முன்னிட்டு இன்று நடைபெறும் நம்ம தெரு வாழ்விடத்தின் விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 03.10.2024 முதல் 13.10.2024 வரை நடைபெறவுள்ள 5வது புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைவிழாவை முன்னிட்டு இன்று(29.09.2024) தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பரநகர் மேற்கு பிரையன்ட்நகர் பிரதான சாலையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ‘நம்ம தெரு வாழ்விடத்தின் விழா” கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று நடைபெற உள்ள நம்ம தெரு வாழ்விடத்தின் விழாவில் பொதுமக்கள் மதுபோதையில் கலந்து கொள்ளவோ, இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுவோ கூடாது, மேலும் பொதுமக்கள் விழா நடைபெற உள்ள சிதம்பரநகர் மேற்கு பிரையண்ட் நகர் பிரதான சாலையை பயன்படுத்தாமல் மாற்று சாலையை பயன்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் மேற்படி விழாவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ நடந்து கொள்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


