
நாசரேத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து காயமுற்ற வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் திருவள்ளுவர் காலணி குமரன் மகன் ராஜதுரை (19). கோவையில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 10 நாள்களுக்கு முன்னர் சொந்த ஊா் வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வீட்டு மாடியில் நின்ற போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தாராம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று ராஜதுரை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் ஜெயேந்திரா நாசரேத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,உதவி ஆய்வாளர் ராய்ஸ்டன் வழக்குப் பதிந்தார். காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி விசாரித்து வருகிறார்.