தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏற்கனவே தேர்தல் நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத பதவிகள் மற்றும் 2021 ஜூன் வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்குத் தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் காளியாக உள்ள ஆழ்வார்கற்குளம் ,ஸ்ரீ மூலக்கரை, வாலசமுத்திரம், கொல்லம்பரும்பு, வெலிடுபட்டி, வேம்பூர், சின்னவ நாயக்கம்பட்டி ஆகிய ஏழு பஞ்சாயத்துத் தலைவர்கள் பதவிக்குத் தேர்தல் நடக்கிறது. அதேபோன்று 40வது வார்டு உறுப்பினர் பதவியும் காலியாக உள்ளன. இந்த 48 பதவிக்கான தேர்தல் அக்டோபர் 9ம் தேதி நடக்கிறது. இதற்காக 110 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 23ஆம் தேதி நடந்தது. இதில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நேற்று முன்தினம் வரை வழங்கப்பட்டது. இதில் இருபத்தி மூன்று பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் மாவட்டத்திலுள்ள 48 பதவிகளில் 26பதவிகளுக்கு மனுத் தாக்கல் செய்த அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6 பஞ்சாயத்துத் தலைவர்கள் பதவிக்கு 16 பேரும் 16 உறுப்பினர் பதவிக்கு 43பேரும் என மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர். இந்த பதவிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 9ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டும் வாக்களித்த அனுமதிக்கப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.