தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி விளையாட்டு போட்டிகளை யில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், துவக்கி வைத்தார்
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (29.08.2024) தருவை விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து ஹாக்கி மட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: ஹாக்கி போட்டிக்கு வருகை தந்திருக்கும் அன்பான மாணவர்கள் அனைவருக்கும் காலை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போட்டியில் நான்கு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் அணிகள் தனிதனியாகப் போட்டியிடபோகிறீர்கள். ஹாக்கி நமது நாட்டினுடைய தேசிய விளையாட்டு அந்த ஹாக்கி விளையாட்டில் நமது நாட்டிற்கு இந்த ஆண்டு ஒரு ஒளிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் ஹாக்கியென்றால் இந்தியாதான் என்ற ஒரு மரபை நாம் வைத்திருந்தோம். அது கொஞ்சகாலமாக மறைந்து தற்போது மிக சிறப்பாக நமது ஹாக்கி அணி தயாராகியுள்ளது.
நீங்கள் அனைவரும் நன்றாக இந்த போட்டிகளில் விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கும், தேசிய அளவிலான போட்டிகளுக்கும் இறுதியில் ஒளிம்பிக் மாதிரியான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் அனைவரும் நன்றாக விளையாட வேண்டும். தேசிய விளையாட்டான ஹாக்கியை மீட்டுக்கொடுப்பதில் நமது மாவட்டமும் பங்கெடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வளையாட்டு நல அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் மற்றும் விளையாட்டு வீரர் மற்றும் வீராகனைகள் பலர் கலந்து கொண்டனர்.


