ஆடி 18ம் பெருக்கு தினத்தன்று வேளாண் விரிவாக்க மையங்களில் விதைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “தூத்துக்கும் மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய நாலுகாக்களில் மானாவாரி விவசாயம் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் செய்யகூடிய பருவமழைக்கு உழுது விதைப்பு செய்யப்படுகிறது.
அதனை தொடர்த்து களை பறிப்பு, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தால், உரமிடுதல் போன்ற பனிகள் நடைபெறும் தை மாதம் இறுதியில் இருந்து பயிரிடப்பட்ட பயிர்களில் இருந்து மகசூல் அறுவடை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழைக்கு விளைச்சல் முற்றிலும் சேதமடைந்தது. அதனை தொடர்ந்து விவசாயிகள் பெரும் கஷ்டப்பட்டனர்.
அதனால் இந்த ஆண்டு கன மழை இன்றி போதிய பருவ மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டாம் தினத்தன்று விவசாயிகள் தனியார் விதை கடைகளில் விதைகளை வாங்குவார்கள். அதிலிருந்து விவசாய பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் வேளாண் விரிவாக்கம் தியங்கங்களில் ஆடி 18 ஆம் தேதி அன்று விவசாயிகளுக்கு வழங்குவதற்கு விதைகளை இருப்பு வைக்க வேண்டும். இதற்கு முன்னேற்பாடாக விதைகளை மாவட்ட வேளாண்மை துறை அங்கந்த வேளாண் விரிவாக மையங்களில் இருப்பு வைத்து விவசாயிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


