தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 44 காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி ஸ்வர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 17 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வித அசம்பாதாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காகவும்,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் முறப்பநாடு, சூரங்குடி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 காவல் நிலைய கொலை வழக்கில் நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுதந்தும் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் எதிரிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர திறம்பட வாதிட்ட தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாசம் அவர்களின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு எதிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் பெற்று தந்த முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது மற்றும் முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி சிறப்பாக சாட்சியம் அளிக்க வைத்து எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் பெற்றுத் தந்த விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசபெருமாள், சூரங்குடி காவல் நிலைய காவலர்கள் பசும்பொன் மற்றும் பாலமுருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தந்த ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமசாமி, தலைமை காவலர் செல்வபாக்கியராஜ், முதல் நிலை காவலர் சரவணகுமார் மற்றும் காவலர் அரவிந்த் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை சம்பவ இடத்தில் இருந்த கைரேகை மூலம் கண்டுபிடித்த தூத்துக்குடி தனிவிரல் ரேகை பதிவு கூட சார்பு ஆய்வாளர்கள் முருகேஸ்வரி மற்றும் பிரேம்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் கடந்த ஆறு வருடங்களாக தலைமறைவாக இருந்த எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாமஸ், ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் ரமேஷ் கண்ணன், முதல் நிலை காவலர் சோமசுந்தரம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி வடபாகம் மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளின் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து திருடு போன சொத்துக்களை பறிமுதல் செய்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாரிமுத்து, தலைமை காவலர் சண்முகநாதன், தாளமுத்துநகர் காவல் நிலைய தலைமை காவலர் சாமுவேல், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் காவலர் முத்தமிழ்ராஜ், தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் மகாலிங்கம், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்குமார், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய முதல் காவலர் திருமணிராஜன், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கு மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பிரட்ரிக் ராஜன், தலைமை காவலர் மணிகண்டன், சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், ஏரல் காவல் நிலைய காவலர் தலைமை காவலர் காசி, காடல்குடி காவல் நிலைய காவலர் பிரபு பாண்டியன், கடம்பூர் காவல் நிலைய காவலர் முருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த கொலை வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறப்பாக சாட்சியம் அளிக்க வைத்து எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதமும் பெற்றுத்தந்த விளாத்திகுளம் காவல் நிலைய தலைமை காவலர் கண்ணன் மற்றும் முதல்நிலை காவலர் வடிவேல் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த கொலை வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறப்பாக சாட்சியம் அளிக்க வைத்து எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதமும் பெற்றுத் தந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய தலைமை காவலர் சமுத்திரசெல்வன், முதல் நிலை காவலர்கள் சுடலைக்கனிராஜ் மற்றும் சொர்ணம் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த போஸ்கோ வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறப்பாக சாட்சியம் அளிக்க வைத்து எதிரிக்கு மூன்று ஆண்டுகள் சிறைதண மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் பெற்றுத்தந்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் லட்சுமி என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணி மெயின் ரோட்டில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாகனத்தை சோதனை செய்து அதில் இருந்த 1200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, எதிரியை கைது செய்து கொடுமை பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்த ஆத்தூர் காவல் நிலைய தனி பிரிவு காவலர் லிங்கபாண்டி மற்றும் காவலர் குணசுந்தர் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எதிரியை கைது செய்து, அவரிடமிருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த, ஆறுமுகநேரி காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ஸ்டீபன்ராஜ் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் பெற்றுத்தந்த சாத்தான்குளம் காவல் நிலைய முதல் காவலர் ராஜேந்திரன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சி.சி.டி.என்.எஸ் சாப்ட்வேரை பயன்படுத்தி இதுவரை குற்ற சம்பவங்கள் ஈடுபட்ட 99 பேர்களை கண்டுபிடித்து கொடுத்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் முத்துக்கனி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சி.சி.டி.என்.எஸ் சாப்ட்வேரில் 475 சமன்களை பதிவேற்றம் செய்து சிறப்பாக பணியாற்றிய நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் விஜயலட்சுமி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்த உதவி புரிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மரியஜெகதீஸ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
காவல் உதவி கண்காணிப்பாளர், 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 44 காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எடிசன் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


