தூத்துக்குடி செயிண்ட் ஆன்ஸ் நர்சிங் கல்லூரி சார்பில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது.
உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி செயிண்ட் ஆன்ஸ் நர்சிங் கல்லூரி, திரு இருதய மருத்துவமனை மற்றும் ஹெல்ப் லைன் ரத்த வங்கி ரத்தகூறுகள் மையம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. திருஇருதய மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் அட்லின் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் ஆனீஸ்குரியன், மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ரெனிட்டா ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்த தான முகாமின் பேராசிரியைகள், செவிலிய மாணவிகள், செவிலியர்கள், பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் என 100 க்கு மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். முன்னதாக கல்லூரி துணை முதல்வர் ஷர்மிளா ஜோன்ஸ் வரவேற்றார். நிறைவாக பேராசிரியை ஆவுடைச்செல்வி நன்றி கூறினார்.


