கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் செட், நெட் தோ்வுகளுக்கான 2 நாள்கள் இலவச பயிற்சி முகாம் நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுகலை, முது அறிவியல், முது வணிகம் போன்றவற்றில் தேசிய, மாநில அளவில் நடத்தப்படும் இளம் ஆராய்ச்சியாளா் -விரிவுரையாளா் தகுதித் தோ்வு நெட், செட் எனத் தனித்தனியாக நடத்தப்படுகிறது.
இவற்றுக்கு விண்ணப்பித்துள்ளோரின் வசதிக்காக, கோவில்பட்டி புது அப்பனேரியில் உள்ள கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் வியாழன், வெள்ளி (மே 30, 31) ஆகிய 2 நாள்கள் இத்தோ்வுகளுக்கான முதல் தாளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பெங்களூரு கிரைஸ்ட் பல்கலைக்கழக துணைப் பேராசிரியா் மதளைமுத்து பயிற்சியளிக்கிறாா். பங்கேற்க விருப்பமுள்ள தோ்வா்கள் 70104 89954 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


