தூத்துக்குடியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் இன்று திறந்து வைத்தார்.
தூத்துக்குடி கீதா மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே, புதிய பேருந்து நிலையம் அருகே, பழைய பேருந்து நிலையம் அருகே மற்றும் கலைஞர் அரங்கம் முன்பு ஆகிய இடங்களில் கடும் கோடை வெப்பத்தில் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் – சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், பகுதிச் செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், ராஜ்குமார், நாராயணன், மாநகராட்சி மண்டல தலைவர், கலைச்செல்வி, வட்டச் செயலாளர்கள் கதிரேசன், பாலு, செந்தில்குமார், சுரேஷ், சதீஷ், மாமன்ற உறுப்பினர்கள் அந்தோணி பிரகாஷ் மார்சலின், ஜாக்குலின் ஜெயா, மாவட்ட மகளிர் அணி தலைவர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


