ஓவியா பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையும் ஆவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகி்ல் அறிமுகமானார். இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 என்னும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு, திரிச்சூர் விமலா கல்லூரியில் தனது பட்டப்படிப்பினை முடித்தார்.


