தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கடைப்பிடிக்கப்பட்டது. வ.உ.சி. மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜெயசீலி, பேபிஏஞ்சலின், பாப்பாத்தி, இசக்கிராஜா, ராஜதுரை, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், ரெக்ஸ்லின், ஜான்சிராணி, சந்திரபோஸ், ராஜேந்திரன், கந்தசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.க. சார்பில்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கர்மவீரர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட தலைவர் தலைமையில் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ் கண்ணன், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், வசந்தன் மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், தூத்துக்குடி காமராஜ் காய்கனி மார்க்கெட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு, காய்கனி மார்க்கெட் தலைவர் சி.த.சு. ஞானராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் மார்க்கெட் மேலாளர் நியூட்டன், துணை மேலாளர் ரவி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
தட்சிண மாற நாடார் சங்கம் சார்பில்
நெல்லை தட்சிண மாற நாடார் சங்கத் தூத்துக்குடி கிளை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சங்க இயக்குநர்கள் கே. லிங்க செல்வன், கே.கே.ஆர். ஜெயக்கொடி ஆகியோர் தலைமையில் காமராஜர் சிலைக்குச் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களான தங்க மாரியப்பன், குமரகுருபரன், பொன்னரசு, சூரியகுமார், சௌந்தர்ராஜன், செல்வின் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


