திறமை..
எட்டு நாட்கள் பொருநை புத்தகக் கண்காட்சியில் தொல்லுயிர் படிமங்கள் (fossils) காட்சிப்படுத்தினோம். மாலை நேரத்தில் மட்டும்தான் அங்குச் சென்று பொதுமக்களுக்கு தொல்லுயிர் படிமங்களைப் பற்றி விளக்கமுடிந்தது.
காலை முதல் மாலை வரை அகமகிழ் கலையகம் நிறுவனர் நெல்லை லெனின் அவர்கள் இவற்றைப் பொதுமக்களுக்கு விளக்கினார். இவரிடம் உள்ள நூற்றுக்கணக்கான பழமையான பொருட்களை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தார். அவரின் குழந்தை இலக்கியா ஆறாவது படிக்கிறாள். அனைத்து தொல்லுயிர் படிமங்களை நன்கு புரிந்து கொண்டு கண்காட்சிக்கு வரும் அனைவருக்கும் பெரும்பாலான நேரங்களில்விளங்கினாள். நல்ல திறமையான குழந்தை. அவளின் திறமையைக் கண்டு வியந்தேன்.அன்புடன் பேராசிரியர் சுதாகர்


