சிந்திப்பான்…
தேர்தல் நேரம். ஒரு அரசில் தலைவர் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரிக்க மக்களிடையே பிரசாரம் செய்து வருகின்றனர். திடீர் என வண்டில் ஒரு கல் வந்து விழுகிறது. திரும்பிப் பார்த்தால் கல்லை எறிந்த சிறுவன் தலை தெறிக்க ஓடுவதைப் பார்க்க முடிகிறது. பிடி பிடி பிடிடா.. அவனை என ஓட்டுநர் கத்த, தலைவர் ஓட்டுநரை அமைதிப்படுத்தினார்.
பின் வண்டியை விட்டு இறங்கி அங்கிருந்த மக்களிடம் பேச ஆரம்பித்தார். இந்த பகுதியில் பள்ளிக்கூடம் எங்கே உள்ளது எனக் கேட்க, மக்கள் இங்கே பள்ளிக்கூடம் எதுவும் இல்லை என கூறியுள்ளனர். நான்கு கிலோமீட்டர் தொலைவில் தான் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட தலைவன் முகத்தில் ஒரு தெளிவு வருகிறது. பின்னர் அந்த கூட்டத்தில் இந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுகிறார். மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் கைதட்ட ஆரம்பிக்கின்றது. வண்டியில் உடனிருந்த ஒருவர், அந்த கல் எறிந்த பையன் என் ஏதோ சொல்ல வர, தலைவன் குறுக்கிட்டு இந்த ஏற்பாடு எல்லாம் அவனுக்குத் தான்.
படிக்க வசதி இல்லை.
சிந்திக்கத் தெரிய வில்லை.
தவறான பாதையில் செல்ல துடிக்கிறான்.
பள்ளிக்கூடம் திறந்தால்
படிப்பான்..சிந்திப்பான்..
நல்வழி நடப்பான்..
இந்த ஊரில் பள்ளிக்கூடம் திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். பள்ளிக்கூடம் திறப்பதே வளர்ச்சிக்கு ஒரேவழி எனச் சிரித்த முகத்துடன் பேசி அந்த கூட்டத்திலிருந்து விடை பெற்றார் அந்த தலைவர். அந்த தலைவர் யாரும் அல்ல பெருந்தலைவர் காமராஜர் தான். அன்புடன் பேராசிரியர் சி சுதாகர்


