சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்கவிழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் முனைவர் எம். முகமது சாதிக் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார்.மின்னணு வாக்குப்பதிவு முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர் பேரவைத் தலைவர் கா.முகம்மது பர்வேஸ் (மூன்றாமாண்டு கணினியியல் துறை) வரவேற்புரை ஆற்றினார். பேரவைத் துணைத் தலைவி எம். என் பத்ரு நிஷா, பேரவைச் செயலாளர் எஸ்.ஜாஸ்மின் சரிகா, பேரவை இணைச்செயலாளர் எம். டி. முகம்மது சலாஹூதீன் ஆகியோருக்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. முகமது சாதிக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அதைத் தொடர்ந்து மாணவர் பேரவைத் தலைவர் கா.முகம்மது பர்வேஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் எம்.கே.எம், முஹம்மது நாசர் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹூசைன், பேராசிரியர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் முனைவர் செய்யது முகம்மது காஜா முதன்மைத் தேர்தல் அலுவலர் முனைவர் ஏ. ஹாமில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர் பேரவைத் தொடக்கவிழா நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.எம். அப்துல் வஹாப் அவர்கள் தமது உரையில் “சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் முதன்மையாகத் திகழ்கிறது.1971ல் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 50 ஆண்டுகளைக் கடந்து பொன்விழாவில் வெற்றி நடைபோடுகிறது. தேசியத் தர மதிப்பீட்டுக்கல்விக் குழுவினர் இக்கல்லூரிக்கு A – GRADE என்ற உயர்ந்த சான்று வழங்கிக் கௌரவித்து உள்ளனர். இக்கல்லூரி உயர்கல்வியைப் பட்டக்கல்வியைத் தரமாகவும் சிறப்பாகவும் வழங்குகிறது இக்கல்லூரியின் கல்வித்தரம் மிகநேர்த்தியாக இருப்பதால் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு இக்கல்லூரிக்குத் தன்னாட்சி வழங்கியுள்ளது. பாடத்திட்டம் மிக உயர்ந்ததாக உள்ளது. பாடத்திட்டத்தை- இக்கல்லூரி பேராசிரியர்களே படைப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
கேரியர் 360 எனும் பத்திரிகை தழிழ் நாட்டின் சிறப்பான கல்லூரி என்று 2017ல் பாராட்டி உள்ளது. இக்கல்லூரி 50 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் கல்லூரியை உருவாக்கிட அரும்பாடுபட்டு அர்ப்பணித்து அயராது உழைத்த கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி அவர்கள் தாளாளராகப் பலஆண்டுகள் அனைவரும் போற்றத்தக்க வகையில் சிறப்பாகச் செயலாற்றியுள்ளார்கள். தமிழகத்தின் மிக உயர்ந்த தொழிலதிபராக வர்த்தகத் துறையில் சிகரமாக உயர்ந்து நிற்கும் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி அவர்கள் கல்விச் சேவையிலும் உயர்ந்து மாணவர்களின் கல்விக்கண் திறக்கப்படத் திறம்பட உழைத்து வருகிறார். அவர் பல்வேறு நூல்களை எழுதக்கூடிய அளவிற்குச் சிறந்த எழுத்தாளராகவும் படைப்பாளராகவும் திகழ்கிறார். அவர் எழுதிய “பூமியைச் சுற்றிப் பாருங்கள்” எனும் நூல் உலக பயணத்திற்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.
ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை
என்ற வள்ளுவரின் குறள் வரிகளுக்கு உதாரணமாகத் திகழ்பவர்.இக்கல்லூரி மதநல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் விதத்தில் கல்லூரியில் இந்து கிறிஸ்தவர் இஸ்லாமியர் என அனைவரும் எவ்விதவேறுபாடின்றிப் பேராசிரியர்களாகப் பணியாளர்களாக வேலை பார்த்து வருவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி– தூத்துக்குடி–தென்காசிஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள கிராமப்புறமாணவர்கள் பெரும்பாலும் இக்கல்லூரி நடத்துகிற“சதக்கத் கிராம மேம்பாட்டுத் திட்டம்” கிராம வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் பாடுபடுகிறது.
மூன்றரை கோடி மதிப்பில் சிலநாட்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட நூலகத்தைத் திறக்க இக்கல்லூரிக்கு மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களை அழைத்து வந்தேன்.மாணவர் சக்தி! மாபெரும் சக்தி! மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும.;உலகில் பெரும் புரட்சிகளுக்கும் மாற்றங்களுக்கும் மாணவர்களே காரணமாக அமைந்திருக்கிறார்கள். தாய் தமிழுக்குச் சோதனை வந்தபோது செந்தழிழைஅழிக்க நினைத்த வடபுலத்தார்கள் அஞ்சி ஓடுகின்ற வகையில் தழிழ் திருநாட்டில் 1967ல் மாணவர்கள் மொழிகாக்க மொழிப் போரில் குதித்து மொழியினைப் பாதுகாத்தார்கள்.
மாணவர்கள் உரிமையைக் காக்க மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது. இதே நெல்லையில் தான், மாணவர் பேரவை மாணவர்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் பாடுபடவேண்டும். அதேநேரத்தில் கல்லூரிக் கட்டுப்பாடுகளுக்கும் விதிகளுக்கும் கட்டுப்பட்டு கல்லூரியின் நற்பெயருக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.
நான் பொதுவாழ்வில் வெற்றி பெற நல்லநிலைக்கு வருவதற்கு இக்கல்லூரி தந்த அடிப்படை பயிற்சியே காரணம். நான் வார்ப்பிக்கப்படவும் பக்குவப்படவும் இக்கல்லூரிக் கல்வியே காரணமாக அமைந்தது. பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகப் பாளையங்கோட்டை தொகுதி மக்களால் 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு சீரியமுறையில் செயலாற்றுவதற்கு இக்கல்லூரி பட்டப்படிப்பு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
கல்லூரிப் படிப்பினை ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000- வழங்கும் திட்டத்தை அறிவித்து கல்லூரிக் கல்வியிணை ஊக்குவிக்கிறார்.இக்கல்லூரியில் படித்தவன் என்பதால் இக்கல்லூரி வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவேன். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வளரட்டும்! உயரட்டும்! பேரவைச் செயலாளர் எஸ்.ஜாஸ்மின் சரிகா நன்றி கூறினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். வேதியியல் துறைத் தலைவர் முனைவர் செய்யது முகமது முன்னிலை வகித்தார்.
Attachments area


