தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.,எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும்,கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் முன்னாள் சேர்மனுமான பிச்சையா அக்கட்சியில் இருந்து விலகி தமிழக மீன் வளம் ,மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து தி.மு.க.,வில் இணைந்தார்.அப்போது மாநில உமரி சங்கர் ,தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் ,ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின் ,முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பில்லா ஜெகன்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இளங்கோ ,உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ,உடன்குடி டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் அஸ்ஸாப் உள்பட பலர் உடனிருந்தனர்.


