Skip to content
நிகழ்வுகள்
845 – பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது.
1461 – ரோசாப்பூப் போர்கள் : யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார்.
1632 – கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது.
1792 – 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் இறந்தார்.
1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார்.
1809 – சுவீடன் மன்னர் நான்காம் குஸ்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1831 – துருக்கிக்கு எதிராக பொசுனிய எழுச்சி ஆரம்பமானது.
1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் : அமெரிக்கப் படைகள் வேராகுரூசு நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.
1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது.
1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.
1867 – கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.
1879 – ஆங்கில-சூலூ போர் : தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.
1886 – அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.
1945 – இரண்டாம் உலகப் போர் : செருமனியின் நான்காம் பிரிவு இராணுவம் சோவியத் செஞ்சேனையினால் முற்றாக அழிக்கப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் வெடிகுண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.
1947 – மடகாசுகரில் பிரான்சிய குடியேற்ற ஆட்சிக்கெதிராக மலகாசி எழுச்சி ஆரம்பமானது.
1961 – வாசிங்டன், டி. சி. மக்கள் அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
1962 – அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் அர்த்தூரோ புரொந்தீசி இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1971 – மை லாய் படுகொலைகள் : அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.
1973 – வியட்நாம் போர் : அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.
1973 – அமெரிக்காவின் லாவோஸ் மீதான குண்டுத்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது.
1974 – நாசாவின் மரைனர் 10 விண்ணுளவி புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.
1974 – சீனாவின் சென்சி மாகாணத்தில் சுடுமட்சிலைப் படை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1999 – உத்தரப் பிரதேசம் , சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர்.
2004 – பல்காரியா , எசுத்தோனியா , லாத்வியா , லித்துவேனியா , உருமேனியா , சிலோவாக்கியா , சுலோவீனியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.
2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
2008 – பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.
2010 – மாஸ்கோ மெட்ரோ தொடருந்து நிலையத்தில் இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2013 – தன்சானியா , தாருசலாம் நகரில் 16-மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
2014 – ஐக்கிய இராச்சியத்தில் முதலாவது ஒருபால் திருமணங்கள் இங்கிலாந்து , வேல்ஸ் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.
பிறப்புகள்
1790 – ஜான் டைலர் , அமெரிக்காவின் 10-வது அரசுத்தலைவர் (இ. 1862 )
1869 – எட்வின் லூட்டியன்சு , பிரித்தானிய கட்டிடக் கலைஞர் (இ. 1944 )
1885 – பா. தாவூத் ஷா , தமிழக இதழாசிரியர், எழுத்தாளர், சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர் (இ. 1969 )
1918 – சாம் வோல்ற்றன் , வோல் மார்ட்டை நிறுவிய அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1992 )
1930 – அனெரூட் ஜக்நாத் , மொரீசியசின் 4வது குடியரசுத் தலைவர்
1946 – ராபர்ட் ஷில்லர் , அமெரிக்க பொருளாதார வல்லுனர், எழுத்தாளர்
இறப்புகள்
1629 – இரண்டாம் ஜேகப் டி கெயின் , டச்சு ஓவியர் (பி. 1565 )
1891 – யோர்ச் சோரா , பிரான்சிய ஓவியர் (பி. 1859 )
1909 – டபிள்யூ. ஜி. ரொக்வூட் , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1843 )
1946 – ஜார்ஜ் வாசிங்டன் , பெல்ஜிய-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (பி. 1871 )
1965 – தமிழ்ஒளி , புதுவைக் கவிஞர் (பி. 1924 )
1971 – பாலூர் து. கண்ணப்பர் , தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர், உரையாசிரியர் (பி. 1908 )
1977 – யூஜீன் வூசுட்டர் , ஆத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (பி. 1898 )
1985 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக் , அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1897 )
1997 – பூபுல் செயகர் , இந்தியப் பெண் எழுத்தாளர், செயல்பாட்டாளர் (பி. 1915 )
2000 – சி. கே. சரஸ்வதி , தமிழ்த் திரைப்பட நடிகை
2007 – சுப்புடு , தமிழக இசை, நடன விமர்சகர்
சிறப்பு நாள்
Continue Reading