எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும் அருங்காட்சியகங்களும்” என்ற நூல் திருநெல்வேலி பொருநை நெல்லை புத்தக கண்காட்சி அருங்காட்சியகத்தில் வைத்து வெளியிடப்பட்டது.
ஏற்கனவே இந்த நூல் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அவர்களிடம் இந்த நூலை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நூல் சிவகளையில் பொருநை நாகரீகம் 3200 வருடம் என நிர்ணயித்து காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் வைத்து வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை பண்பாட்டு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இந்த நூலை வெளியிட்டார். டாக்பியா சங்கத்தின் மாநில பிரமுகர் முத்துபாண்டியன் பெற்று கொண்டார். வானொலி அறிவிப்பாளர் ஜெபஸ்டியான், மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து, வல்லநாடு ஆடிட்டர் துரை, சியாமளா வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணுக்கு விலாசம் அனுப்பினால் உங்கள் இல்லம் தேடி நூல் வந்து சேரும், பணம் 375/-& கொடுத்து நூலை பெற்றுக்கொள்ளலாம். தபால் கட்டணம் கிடையாது.


