சாத்தான்குளம் பகுதியில் நடைபெறும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெள்ள காலங்களில் கடலில் கலக்கும் 13 மில்லியன் கன அடி உபரி நீரை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த 2009ல் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கலைஞர் தாமிரபரணி ஆறு, நம்பியாறு மற்றும் கருமேனியாறு ஆகியவற்றை இணைத்து நதிநீர் இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார், அப்போது இந்த திட்டத்திற்கு 369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
கடந்த 10 ஆண்டுகால பணிகளில் தொய்வு ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டு கிடந்த நிலையில் மீண்டும் கடந்த வரும் இந்த பணிகள் மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில் இன்றைய தினம் சபாநாயகர் இன்று நேரில் பார்வையிட வருகை தந்தார். அவர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காடு பகுதியில் நடந்து வரும் பணிகளை நேரில் பார்வையிட வருகை தந்தார். அவருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் வந்தனர். பணிகளை பார்வையிட்ட சபாநாயகர் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பேசுகையில், இந்த பகுதியில் பணிகள் நடைபெறும் பகுதியில் ஒரு சிலர் மட்டும் இந்த பணிக்கு தற்போது வரை இடம் தராமல் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே அவர்களிடம் உள்ளூர்காரர்களான நீங்களே பேசி அதற்கு சுமூக தீர்வு காணுங்கள். அப்போது தான் இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என்று கூறினார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடம் பேசுகையில், இந்த பணிகளை 4 மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


