இந்திய விடுதலைப் போரில்
தண்டனைகள் கண்ட தூத்துக்குடி
1758 மே-16
நெற்கட்டாஞ்செவ்வல் பூலித்தேவரின் கோட்டை ஆங்கிலேயரால் அழிக்கப்படுதல்.
1759 ஜூலை2 எட்டையாபுரத்தின் தளபதி வீரன் அழகு முத்துக்கோன் மற்றும் 49 வீரர்களின் வலது கைகள் வெட்டப்பட்டன.
1782
டச்சுக்காரர்களிடமிருந்து தூத்துக்குடியின் ஆட்சிப் பொறுப்பு ஆங்கிலேயருக்கு கிடைத்தல்
1784
தூத்துக்குடியில் முத்துக்குளிக்கும்
துறைமுகத்தை ஆங்கிலேயர் தொடங்குதல்.
1799 செப்டம்பர் – 5 பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை வீழ்ந்தது.
செப்டம்பர் 13
கட்டபொம்மனின் அமைச்சர் தானாதிபதி பிள்ளை நாகலாபுரத்திலும். நாகலாபுரம் சுந்தரபாண்டியன் கோபாலபுரத்திலும் தூக்கிலிடப்படுதல்.
அக்டோபர் -16
வீரபாண்டியக் கட்டபொம்மன் கயத்தாரில் தூக்கிலிடப்படுதல்.
1800ஜனவரி-22
கட்டபொம்மனை அழிப்பதற்கு உதவி செய்த எட்டையபுரம் பாளையக்காரருக்கு சிவஞானபுரம் கிராமம் பரிசாகத் தரப்படல்.
1801 பிப்ரவரி12
பாளையங்கோட்டைச் சிறைச்சாலை தகர்க்கப்பட்டு ஊமைத்துரை மீட்கப்படல்.
மே-21பாஞ்சாலங்குறிச்சி மீது கர்னல் அக்நியூ படையெடுத்தல்.
ஜூன் 10
பாஞ்சாலங்குறிச்சியில் செவத்தையா தூக்கிலிடப்படுதல்.
அக்டோபர் 27
மருது சகோதரர்கள் தூக்கிலிடப்படுதல்.
1805 தீரன்சின்னமலை தூக்கிலிடப்படுதல்.
1806 ஜுலை 10
வேலூர் சிப்பாய்க் கலகம்
1807மே10 மீரட்டில் சிப்பாய்க் கலகம்
1872 செப்டம்பர் -5
வ.உ.சிதம்பரனார் பிறத்தல்
1882 டிசம்பர்-11
பாரதியார் பிறத்தல்.
1885 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
1900
வ.உ.சி.தூத்துக்குடியில் வழக்கறிஞராதல்
1905
வங்காளப் பிரிவினை – சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.
1906ஆகஸ்ட் 8
தூத்துக்குடியில் சுதேசி இயக்கத்தின் முதல் ஆண்டு விழாவை வ.உ.சி நடத்துதல்.
நவம்பர் 6
சுதேசிக்கப்பல் ஓட்டுவதற்குப் பதிவு செய்தார் வ.உ.சி.
1907
மாதரம் என்று பொறிக்கப்பட்டக் கொடியுடன் கப்பல் தூத்துக்குடிக்கு வருதல்.
1908 பிப்ரவரி-3
சுப்பிரமணியசிவா தூத்துக்குடி வருதல்
பிப்ரவரி -27
தூத்துக்குடி கோரல்மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தல்.
மார்ச் – 12
வ.உ.சி. மற்றும் சிவா ஆஷ்துரையால் கைது
1908 நவம்பர் -4
வ.உ.சி.யின் ஆயுள் தண்டனை. ஆண்டாகக் குறைப்பு.
1911 ஜூன்-17
மணியாச்சி இரயில்வே நிலையத்தில் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றார். வாஞ்சிநாதன்.
1912
ஜாலியன் வாலாபாக் படுகொலை
1919 மார்ச்-27
மகாத்மா காந்தி தூத்துக்குடி வருகை
ஏப்ரல் -18
காரணமில்லாமல் கைது செய்யும் சர்வாதிகார ரௌலட் சட்டம் அறிவிப்பு
1921 அக்டோபர் 11
விவசாயக் கைத்தொழில் சங்கத்தை
நிறுவினார் வ.உ.சி.
செப்டம்பர் 14
மகாகவி பாரதியார் மறைவு
1925
சுப்பிரமணிய சிவா மறைவு
1927 அக்டோபர்-6
மகாத்மா காந்தி நேருஜி இந்திராவுடன்
தூத்துக்குடி வருதல்.
1930 மார்ச் -12
அகில இந்திய சத்தியாகிரகம் – தண்டி யாத்திரையை காந்திஜி தொடங்கினார்.
1930 ஏப்ரல்-6
இந்தியாவெங்கும் உப்புச்சத்தியாகிரகம்
1931. 32
வட்டமேசை மாநாடுகள் நடைபெற்றன.
1931 ஏப்ரல்-5
காந்திஜி-இர்வின் ஒப்பந்தம் நிறைவேற்றம்.உப்புத்தடைச் சட்டம் நீக்கப்பட்டது.
1932
கோவில்பட்டியில் கள்ளுக்கடை மறியல் மற்றும் அந்நிய நாட்டுத் துணி எரிப்புப் போராட்டம்.
1934
காந்திஜி தூத்துக்குடி வருகை
1936 நவம்பர் 18
செக்கிழத்த செம்மல் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் மறைவு.
1942 ஆகஸ்ட் 8
வெள்ளையனே வெளியேறு தீர்மானம் இயற்றப்பட்டது. செய் அல்லது செத்துமடி என்ற காந்திஜியின் உத்தரவினால் இந்தியாவில் வீறு கொண்டெழுந்தனர். தேசபக்தர்கள்.
ஆகஸ்ட் 15. 16
திருச்செந்தூர் வட்டாரத்தில் தந்திக்கம்பிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன.
ஆகஸ்ட் – 17
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் தேரியில் விடுதலை. வீரர்கள் ரகசியக் கூட்டம்.
ஆகஸ்ட் – 19
குரும்பூர் இரயில்வே நிலையத்தைத்
தாக்கி தீ வைத்து விட்டு. துப்பாக்கியைக் கைப்பற்றுதல்
ஆகஸ்ட் -22
கோவில்பட்டி. கடலையூரில் ஆங்கிலேயர் தடியடி. துப்பாக்கிச்சூடு. குண்டடிபட்டு வீ.சங்கரலிங்கமுதலிய மரணம். இருவர் காயம்
ஆகஸ்ட் – 25
எட்டையாபுரம், நாசரேத் பகுதிகளில் தந்திக் கம்பிகள் வெட்டப்பட்டன.
அகஸ்ட் – 26
ஆறுமுகனேரி மற்றும் நல்லூர் பகுதிகளில் தந்திக் கம்பிகள் வெட்டி
அகற்றப்பட்டன.
ஆகஸ்ட் 30
தூத்துக்குடியில் கூட்டம் நடத்திடத் தடை சட்டத்தை மீறிய வீரர்கள் கைது.
செப்டம்பர் – 7
உடன்குடி, தாங்கையூரில் தீவிரவாத இளைஞர்கள் ரகசியக்கூட்டம்
செப்டம்பர் – 7
மெஞ்ஞானபுரம் அஞ்சல் அலுவலகம்
தாக்கப்பட்டு தீயிடப்படுதல்
செப்டம்பர்-12
தூத்துக்குடியில் இரண்டு கள்ளுக் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன
1942 செப்டம்பர்-20 குலசேகரன்பட்டினத்தில் ஆங்கிலேய உப்பள அதிகாரி லோன் துரை வெட்டிக் கொலை செய்யப்படுதல்
1943பிப்ரவரி8
லோன்துரை கொலைவழக்கில் ஆறுமுகனேரி வெ.காசிராஜன். ஆறுமுகனேரி பெ.ராஜகோபால் ஆகிய இருவருக்கும் தூக்குத்தண்டணையும். ஆர்.செல்லத்துரை.
ஏ.எஸ். பெஞ்சமின்.
டி.தர்மம் கோயில் பிள்ளை. தங்கையா.
சிவந்திக்கனி நாடார் ஆகியோருக்கு ஆயுள்தண்டணையும் விதிக்கப்பட்டது
1947 ஆகஸ்ட் – 15
இந்திய விடுதலை பெறுதல்.


