
தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பா குளம் செல்லும் கடையனோடை வாய்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்து வந்துள்ளது. இதை கண்ட அந்த பகுதி பொது மக்கள் ஆழ்வார்திருநகரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மிதந்து வந்த சடலம் கடையனோடை வாய்கால் மதகு பகுதியில் ஏராளமான ஆகாய தாமரை உள்ள நிலையில் அந்த செடிகளுக்குள் சிக்கி கொண்டது. தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் விரைந்து வந்தார். பின்னர் தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயனைப்பு துறையினர், வாய்காலில் கிடந்த ஆகாய தாமரை செடிகளுக்குள் சுமார் 2 மணி நேரம் தேடி உடலை கண்டுபிடித்தனர். அதில் உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் என்பது தெரிய வந்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை செய்ததில் அவர் உடுமலைப்பேட்டை, இழுப்புநகரம் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் மகன் டேவிட் குணராஜ் என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. வாய்க்காலில் ஆண் பிணம் மிதந்து வந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.